பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார்.;

Update:2023-03-23 00:15 IST

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் நேற்று மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையத்திற்கு காரில் வந்தனர். பின்னர் 5 பேரும் அங்குள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் மிதுன் (வயது 16) திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டதாக தெரிகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் இட்டனர். தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி இறந்த மிதுனின் உடலை தீயணைப்பு வீரர்கள் இரவில் மீட்டனர்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்