அறிவியல் திருவிழா
பரப்பனாமேடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அறிவியல் திருவிழா;
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ஒன்றியம் பரப்பனாமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் விழா நடைபெற்றது. எளிய பொருட்கள் மூலம் அறிவியல் சோதனைகள், தொப்பி தயாரித்தல், பூக்கள் செய்தல், மாயகைகுட்டை மற்றும் கைவினைப்பொருட்களையும் வானவில் மன்ற கருத்தாளர் பிரியா மற்றும் மாணவர்கள் செய்து காண்பித்தனர். இதற்கு பரப்பனாமேடு ஊராட்சி மன்ற தலைவர் சுசித்ரா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜூலியஸ் வரவேற்றார். இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கீர்த்தனா, காயத்ரி, வினோதினி, நித்யா, பிரீத்தி, ஆரோக்கியமேரி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.