மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காவலாளி சாவு
அன்னூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.;
அன்னூர்
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 42). கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக அன்னூருக்கு சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இதில் தமிழ்ச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தமிழ்ச்செல்வன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.