சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி உயிரிழப்பு
கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் சாத்தான்குளம் பகுதியில் இடைச்சிவிளை, மோடி நகர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் போலையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை மகன் பெனிஸ்கர் (வயது 58). இவர் அங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இடைச்சிவிளை, மோடி நகர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.