அரூரில் கடந்த மாதம் உரிய ஆவணம் இன்றி இயங்கிய 21 வாகனங்கள் பறிமுதல்

Update:2023-04-05 00:15 IST

அரூர்:

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் கடந்த மாதம் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி கடந்த மாதம் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதாக 92 வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 250 அபராதமாக விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்