பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம்

பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.;

Update:2024-01-17 14:37 IST

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை, பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் என்றால் லட்சக்கணக்கானோர் பழனிக்கு திரண்டு வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

அதன்படி பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழனி அடிவாரம், கிரிவீதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் வர்த்தகர்கள் சங்கம் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்