வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.;

Update:2022-10-12 22:41 IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் மாவட்ட செயலாளர் ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அசோகன், வட்டாரக்குழு பொறுப்பாளர்கள் ரசூல், சைய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முத்தையா, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வட்டார செயலாளர் ஆரிப் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், இஸ்லாமிய விதவைகள் மற்றும் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசு உடனே வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் அசோக்குமாரிடம் மனு கொடுத்தனர். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்