விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2022-09-14 00:09 IST

தா.பேட்டை:

தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிசுவநாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ராஜகணபதிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் ராஜகணபதிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் தா.பேட்டை அருகே என்.கருப்பம்பட்டி கிராமத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் கோவிலில் சக்தி விநாயகருக்கும், தேவானூர் சண்முககிரிமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள சக்திபால விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்