தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2023-01-01 00:57 IST

தோகைமலை அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியில் உள்ள இளம்பெண்கள் கோவிலை சுற்றி தண்ணீரை தெளித்து சுத்தம் செய்தனர். பின்னர் பல்வேறு வண்ணங்களில் கோலமிட்டு மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்