தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா?

தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா? என நாமக்கல் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;

Update:2023-03-17 00:15 IST

கோடை காலத்தை முன்னிட்டு ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கட்கிழமை வரை வாராந்திர சிறப்பு ரெயிலை தென் மேற்கு ரெயில்வே இயக்க உள்ளது. இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, அர்சிகீரே, துமகூரு, பெங்களூரு, பங்காருபேட், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்க உள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு மட்டும் நிறுத்தம் வழங்கப்படவில்லை. நாமக்கல் நீங்கலாக மற்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்கிறது. இது நாமக்கல் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்களுக்கு நாமக்கல் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல்லை மட்டும் புறக்கணிப்பதா? என்று கேள்வி எழும்புகின்றன. நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்ல ரெயில் வசதி இல்லை. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல்லில் நிறுத்தம் கொடுத்தால் நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்ல வசதியாக இருக்கும். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலையத்தை அனைத்து ரெயில்களும் படிப்படியாக புறக்கணிக்கும்.

எனவே மக்கள் பிரதிநிதிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் முன்பதிவு தொடங்கவுள்ள இந்த சிறப்பு ரெயிலுக்கு உடனடியாக நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கி மறுஅறிவிப்பை வெளியிட வேண்டும் என சேலம் கோட்டம் ரெயில்வே நிர்வாகத்தை நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்