நல்லதங்காள் கோவிலில் சிறப்பு வழிபாடு
நல்லதங்காள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் நல்லதங்காள் கோவில் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் மாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.