பழையூர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

பழையூர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு;

Update:2023-09-04 00:30 IST

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ். குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் ஸ்ரீ அனுமந்தராய ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவணி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பூஜை நிறைவாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பழையூர், செஞ்சேரி, குமாரபாளையம், அருகம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்