மாநில சதுரங்க போட்டி தொடக்க விழா
காரைக்குடியில் மாநில சதுரங்க போட்டி தொடக்க விழா நடைபெற்றது.;
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காரைக்குடி பிரைஸ் பாக்ஸ் அகாடமி சார்பில் காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயம் ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டி நேற்று முதல் தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போட்டி இயக்குனர் சேவு.முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோவிலூர் ஆதினம் சீர்வளர்சீர் நாராயண தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். போட்டியை உலக சதுரங்க சம்மேள பிடே முன்னாள் தலைவர் சுந்தர் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட பொருளாளர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் கூடுதல் செயலர் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார். போட்டியில் பள்ளியின் முதல்வர் மணிமொழி மோகன், தலைமை நடுவர் பாஸ்கர், துணை நடுவர் விசாலாட்சி, மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் கிளை கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.