தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

Update: 2023-08-24 19:00 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை, கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நேற்று மாலை ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் பொதுமக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உடன் இருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்