கலவை
கலவையில் பாம்பு கடித்து மாணவி பலியானார்.
கலவை பேரூராட்சி 15-வது வார்டில் ரோடு தெருவில் வசிக்கும் பாண்டியனின் மகள் பிரியதர்ஷினி (வயது 14). இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 10-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று பிரியதர்ஷினிைய கடித்துள்ளது.
திடுக்கிட்டு எழுந்த அவர், தன்னை கடித்து விட்டு ஓடிய பாம்பை பார்த்து கூச்சலிட்டு அலறினார். அவரை, குடும்பத்தினர் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.