மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

சி.ம.புதூர் கிராமத்தில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-22 11:18 GMT

சேத்துப்பட்டு

தேசூர் அருகே சி.ம.புதூர் கிராமத்தில் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கிரிஜா, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தி.ரா.நம்பெருமாள் வரவேற்றார்.

தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அனைத்து தெருக்களிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

மேலும் அரசு வழங்கப்படும் சலுகை, ஆங்கில வழிக்கல்வி, விலையில்லா பாட புத்தகம், புத்தகப்பை, நோட்டு புத்தகம், எழுதுபொருள் ஆகியவை குறித்து ஊர்வலத்தில் கோஷம் எழுப்பி சென்றனர்.

ஊர்வலத்தில் தெள்ளார் வட்டார கணக்காளர் மரியா, உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து 6 புதிய மாணவ-மாணவிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்