ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதல்
நெல்லையில் ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
நெல்லையில் ஓடும் பஸ்சில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் மோதல்
நெல்லை சந்திப்பில் இருந்து கைலாசபுரத்திற்கு அரசு டவுன் பஸ் நேற்று மாலையில் சென்று கொண்டு இருந்தது. இதில் சில மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது, மாணவர்களிடையே பஸ்சில் வைத்து கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் மாணவர்களை விலக்கி விட்டனர்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் கதவை பூட்டி வைத்து விட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 8 மணி வரை பூட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எழுதி வாங்கி அனுப்பினர்
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், ேமாதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எழுதி வாங்கிவிட்டு மாணவர்களை விடுவித்தார்.