சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..காரணம் என்ன?

சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-12-19 16:38 IST

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 40,04,694 பேரில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

* எஸ்.ஐ.ஆருக்கு முன் - 40,04 694

* எஸ்.ஐ.ஆருக்கு பின் -25,79,676

* நீக்கம் - 14,25,018

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 26,79,676 ஆகும்.

* இறந்த வாக்காளர்கள் - 1,56,555

* முகவரியில் இல்லாதவர்கள் 27,328

* குடி பெயர்ந்தோர் - 12,22,164

* இரட்டை பதிவுகள் - 18,772

* மொத்தம் நீக்கப்பட்டோர் 13,25,018

*சென்னையில் ஆண்கள் 12,47,690, பெண்கள் 13,31,243 வாக்காளர்கள், இதர பிரிவினர் 743 பேர்.

சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்