ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு - திண்டிவனம் அருகே பரபரப்பு

வலிப்பு ஏற்பட்டபோது ஓட்டுநர் பேருந்தின் வேகத்தை குறைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.;

Update:2025-12-19 16:52 IST

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் பேருந்தின் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க கடும் முயற்சி செய்தார். அந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வலிப்பு நோய் ஏற்பட்ட ஓட்டுநர் திருமலையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்