மழைமானி செயல்பாடு குறித்து ஆய்வு
நாட்டறம்பள்ளியில் மழைமானி செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.;
திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் மழைமானியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழைமானி நல்ல நிலையில் இயங்கி வருவதை உறுதி செய்தனர்.
இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.