தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.;
வத்திராயிருப்பு,
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆடி அமாவாசை திருவிழா
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழாவானது வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொள்வது வழக்கம்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சப்-கலெக்டர் பிரித்விராஜ் தாணிப்பாறைக்கு வந்தார்.
அடிப்படை வசதி
அப்போது அவர் தாணிப்பாறை வண்டி பண்ணை பஸ் நிறுத்தம், சாலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் திருவிழாவிற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தடையின்றி செய்து கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தாசில்தார் உமாமகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் பரமசிவம், பவுன் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.