மிளகு பிள்ளையார் கோவிலில் திடீர் தீ
சேரன்மாதேவி மிளகு பிள்ளையார் கோவிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் பிரசித்தி பெற்ற மிளகு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.