இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-06-10 00:15 IST

ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா மனைவி காயத்ரி (வயது 23). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துராஜா சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் காயத்ரி தனது குடும்ப செலவிற்காக வெளியில் கடன் வாங்கியிருந்தாராம். இதனை அறிந்த முத்துராஜா நம் வருமானத்திற்குள் குடும்பம் நடத்த கற்றுக்கொள்ளும் படியும் ஏன் கடன் வாங்குகிறாய் என்றும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்ரி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்