கோடை கால இந்து சமய பண்பாட்டு முகாம்

உடன்குடியில் கோடை கால இந்து சமய பண்பாட்டு முகாம் நடந்தது.;

Update:2022-05-22 16:21 IST

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி ஆகியோர் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு கோடை கால இந்து சமய பண்பாடு வகுப்புகள் உடன்குடி ஒன்றிய கிராமப்புறங்களில் நடந்து வருகிறது. இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு இந்து சமய புராணங்கள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது, மேலும் சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், கர்ணன் ஆகியோரின் வாழ்க்கையையும், இந்துக்களாக பிறந்தவர்கள் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய தியானம், தினசரி இந்து கோவிலுக்கு செல்லும் அவசியம் ஆகியவற்றை சிறுவர்களுக்கு இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்