சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் அலுவலர் ஆய்வு

பனப்பாக்கத்தில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update:2023-04-27 00:57 IST

பனப்பாக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக 1,207.92 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் நேற்று சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் காசிச்செல்வி நேரில் ஆய்வுசெய்தார். அப்போது நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

சிப்காட் திட்ட பொதுமேலாளர் பிரபாவதி, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, நெடும்புலி கிராம நிர்வாக அலுவலர் மீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்