2-வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 2-வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

Update: 2023-05-18 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

ணக்கெடுப்பு பணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.

இங்குள்ள 40 வனக்காவல் பீட்டுகளில் வன சரக அலுவலர்கள் தலைமையில் கென்னத் ஆண்டாசன நேச்சா சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலய பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

யானைகள் கால்தடம்

அதில் யானை, மான், மயில், காட்டெருமை போன்ற விலங்குள் நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. இநத நிலையில் நேற்று 2-வது நாளாக யானைகள் கால்தடம், எச்சங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்