தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணை

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 20 கைதிகளுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.;

Update:2023-02-16 17:06 IST

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் புழல் சிறையில் உள்ள 20 கைதிகளுக்கு கடந்த 3.8.2022 முதல் 30.11.2022 வரை ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு இதற்கான சான்றிதழ் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. வைகுந்த் முன்னிலையில் சிறை கைதிகளுக்கு பணி நியமன ஆணைகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், புழல் சிறை சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், இரா.கிருஷ்ணராஜ் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்