தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.;
சென்னை,
தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவர்னர் ஆர்.என்.ரவி 4 அல்லது 5 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும் இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.