கருங்குளத்தில் தாமிரபரணி பிறந்தநாள் விழா - நதியை காக்க உறுதிமொழி எடுத்தனர்

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தாமிரபரணி நதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-06-12 14:31 GMT

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் தாமிரபரணி ஆற்றின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது.

அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் அனைவரும் வரிசையாக நின்று நதியை காக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர், நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

செய்துங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார்.

இதில் செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்