சுற்றுலா பயணிகளை குறி வைத்துபோதை காளான் விற்ற 3 பேர் கைது

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-12 18:45 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் நாயுடுபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர்.

அதில் 100 கிராம் போதை காளான் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த ஜெனிபர் (வயது 23), அந்தோணி ராகுல் (20), கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அல்காத் (35) என்பதும், சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்