கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராகதேவி (வயது 32). இவருக்கும், மதுரையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சதீஷ், கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் கேட்டதால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராகதேவி, கடந்த 5 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து, கொளத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சதீஷ், மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராகதேவி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை