இளம்பெண் தற்கொலை

மணிமுத்தாறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-06-17 01:56 IST

அம்பை:

மணிமுத்தாறு பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பூதபாண்டி மனைவி சுகந்தி (வயது 30). இவர் அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் அப்பகுதியில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகந்தி வீட்டில் டீயில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு அம்பை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்