இளம்பெண் தற்கொலை

அம்பை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-06-24 01:25 IST

அம்பை:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி மகள் மீனா (வயது 27). இவர் குடியிருக்கும் பகுதியின் அருகே மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்்கான பணிகளை மேற் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கும் இவரது சகோதரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மீனா சம்பவத்தன்று விஷ மருந்தை சாப்பிட்டு, வீட்டில் மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்