கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

காட்பாடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-09 00:10 IST

காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உள்ளிபுதூரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் சூர்யா என்ற கரிகிரி சூர்யா என்பதும், ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்