பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை மகா மாரியம்மனுக்கு பூசாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு மலர்களின் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.