சுக்ரீஸ்வரர்சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி சுக்ரீஸ்வரர்சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.;

Update:2023-07-21 23:16 IST

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி சுக்ரீஸ்வரர்சாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

சுக்ரீஸ்வரர் கோவில்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆவுடைநாயகி அம்பாள் சமேத சுக்ரீஸ்வரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

புகழ்மிக்க மிகவும் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன்படி திருக்கோவிலில் நேற்று 26-வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அவ்வகையில் மாலை 5 மணிக்கு பரம்பரை அறங்காவலர்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உலக அமைதிக்காகவும், குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும் இப்பகுதி பெண்கள் திருவிளக்கு பூைஜயில் கலந்துகொண்டனர். முன்னதாக பகல் 12 மணிக்கு கணபதி பூஜை, சிவசக்தி கலசஸ்தாபனம் ருத்ர ஜெயம் ஹோமம், திரவ்யாகுதி பூர்ணாகுதியும் அதனைத் தொடர்ந்து சுக்ரீஸ்வரருக்கும் ஆவுடைநாயகிக்கும் 16 திரவியங்களுடன் சுவாமி அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

சாமி தரிசனம்

அதனைத் தொடர்ந்து பகல் 2 மணிக்கு அலங்கார மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் மாலை 7 மணிக்கு மேல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.இதில் பக்தர்கள் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்