காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

பாபநாசம் அருகே ராஜகிரி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-06-07 21:48 GMT

பாபநாசம்;

பாபநாசம் தாலுகா ராஜகிரி அம்பேத்கர் தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை அடைந்தனர்.பின்னர் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் வீதி உலா தப்பாட்டம் வாணவேடிக்கையுடன் நடந்து கோவிலை அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்