தென்காசி: சோலைபுரம் அருள்மிகு செல்வ விநாயகர்,ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடைவிழா
தென்காசி அருகே சோலைபுரத்தில் அருள்மிகு செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடைவிழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.;
தென்காசி மாவட்டம், சோலைபுரத்தில் அருள்மிகு செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பொதுமக்கள் சார்பில் கொடைவிழா சிறப்பாக நடைபெறும் .
இந்த ஆண்டுக்கான கொடைவிழா 24 ம் தேடி திருக்கால்நாட்டுடன் துவங்கியது.இதனையடுத்து கோவிலில் முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் 30 ம் தேதி மாலை பூந்தட்டு எடுத்தல், குடியழைப்பு தீபாரதணை காண்பிக்கபட்டது. கொடை நாளான நேற்று காலை 8 மணிக்கு பெரிய கோவில் ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலிருந்து இருந்து ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர்.
அதன்பின்னர் காலை 11மணிக்கு அம்மனுக்கு குங்கும அபிஷேகம், மஹாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைப்பெற்றது.அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல், 5 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், அக்னிசட்டி ஊர்வலம், 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைப்பெற்றது.அதன்பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் நள்ளிரவில் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஸ்ரீ முத்தாரம்மன் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வழம் வந்த திரு உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் இளைஞர் அமைப்பினர் செய்திருந்தனர் .