6 மாதத்தில் பிறந்த குழந்தையின் உடல் எடை அதிகரித்தது

டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் 6 மாதத்தில் பிறந்த குழந்தையின் உடல் எடை அதிகரித்தது.

Update: 2023-05-29 19:00 GMT


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த வனிதா-மாரிமுத்து தம்பதியருக்கு கடந்த 14.3.2023 அன்று விருதுநகர் அரசு மருத்துவமனையில் 6-வது மாதத்தில் 640 கிராம் எடையில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணியின் அறிவுரையின்படி குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைமை டாக்டர் ஜவகர், குழந்தைகள் நலத்துறை தலைமை டாக்டர் முருகேசலட்சுமணன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் சண்முக மூர்த்தி, பிரியங்கா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உயர்ரக மருந்துகள் வழங்கப்பட்டன. கண், காது, இதயம் போன்ற உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர உயர் ரக சிகிச்சையினால் அந்த குழந்தை நன்கு தேறி தற்போது 1 கிலோ எடையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்