பர்கூர்
பர்கூர் அருகே உள்ள நேரிடமானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவர் நேற்று வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்று இருந்தார். அவருடைய மனைவி பெரியக்கா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று இருந்தார். இவர்களுடைய வீடு மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டிலிருந்த உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து போனது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.