கனமழைக்கு வீடு இடிந்தது

கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது.;

Update:2022-10-22 00:15 IST

பரமக்குடி,  

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பரமக்குடி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் பரமக்குடி அடுத்த ஈஸ்வரன் கோவில் முதல் தெருவில் வசித்து வந்த சீனிவாசன் என்ற கைத்தறி நெசவாளரின் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து அறிந்த எமனேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜாவிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்