வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
கரூர் தூளிப்பட்டியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 23). இவர் புலியூர் அமராவதி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த ராஜபாண்டி (36) என்பவர் மனோஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்துள்ளார். இதுகுறித்து மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, ராஜபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.