முதியவர் பலி
திண்டுக்கல் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.;
திண்டுக்கல் அருகே உள்ள ம.மூ.கோவிலூரை சேர்ந்தவர் சையது அப்துல்பாரி (வயது 82). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது உறவினர் சையதுஜாபர் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சையது ஜாபர் ஓட்டினார்.
ம.மூ.கோவிலூர் பிரிவு அருகே தனியார் திருமண மண்டபத்துக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை சையது ஜாபர் திருப்ப முயன்றார். அப்போது அந்த வழியாக வேடசந்தூரை சேர்ந்த மோகன் குமார் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சையது ஜாபர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சையது அப்துல்பாரியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் விபத்தில் சிக்கிய 2 பேர் லேசான காயத்துடன் தப்பினர். இந்த சம்பவம் குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.