மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

வெண்ணந்தூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.;

Update:2023-05-01 00:15 IST

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அடுத்த பழந்தின்னிப்பட்டி கங்காரக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 70). இவர் தனது சைக்கிளில் தச்சங்காடு பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும்போது ெவண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக பெரியண்ணன் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பெரியண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த பழனிராஜ் (21) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்