பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்தரங்கில் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.;

Update:2023-06-09 04:00 IST

கோவை

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்தரங்கில் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வடகோவையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. கருத்தரங்கை மாவட்ட கலெக்டா் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி குழந்தைகளை வீட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்து துறையின் பொறுப்பு. குழந்தைகளின் பாதுகாப்புக்கு தகுந்த மாதிரியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி காவலன் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு

கூடுதல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விபத்துக்களால் ஏற்ப டும் இறப்புகளை குறைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் வரக்கூடிய, அரசு பஸ்கள், பள்ளிக்கூட பஸ்கள், வேன்கள், தனியார் பஸ்களை எந்த வகையில் இயக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி படிப்பை இடைநிறுத்தும் குழந்தைகளை கண்டறிந்து இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப் பட்டு வருகிறது.

சமூக பிரச்சினைகள்

குழந்தைகள் பள்ளியை இடைநிறுத்தம் செய்வதால், திருமணங்கள், குழந்தை தொழிலாளர்கள், போதை பழக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். எனவே அவர்களை இது போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க பள்ளிகள் மிக பாதுகாப்பானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவா ணன், முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்