விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை

போடி அருகே உள்ள சிலமலை ஊராட்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

Update: 2022-05-20 18:17 GMT

போடி அருகே உள்ள சிலமலை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைக்கு வந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்க வில்லை என தெரிகிறது. வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் தங்கபாண்டி, காமராஜ், விவசாய சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், கிளைச்செயலாளர் பரமய்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் ஒன்றிய மேற்பார்வையாளர் பிரதாப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்