செவ்வந்தி பூக்கள் பறிக்கும் பணி

செவ்வந்தி பூக்கள் பறிக்கும் பணி நடந்தது.

Update: 2022-12-30 20:25 GMT

தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சீசனுக்கு ஏற்ற வகையில் பூக்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு மாதிரியான விலை கிடைக்கும். பொங்கல் சமயத்திலும், ஆயுத பூஜை சமயத்திலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். சில நேரங்களில் அதிக விளைச்சல் இருக்கும்போது கிலோ ரூ.10-க்கு கூட விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில நேரங்களில் ஒரு கிலோ பூ ரூ.120 வரை விலை போகும். செவ்வந்தி பூவுக்கு தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலை கிடைக்கிறது. இது ஓரளவுக்கு லாபம் தரக்கூடிய வகையில் உள்ளது. இதனால் தற்போது செவ்வந்தி பூக்கள் பறிக்கும் பணி நடந்து வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்