பெண்ணை தாக்கியவர் கைது

ஏர்வாடியில் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-27 00:47 IST

ஏர்வாடி:

ஏர்வாடி முகைதீன் பள்ளி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜீனைதா (வயது 50). இவர் தனது கணவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த சித்திக் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் சித்திக், ஜீனைதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் சித்திக்கை விட்டு பிரிந்தார். இதற்கிடையே நேற்று ஜீனைதா வீட்டுக்குள் சித்திக் அத்துமீறி நுழைந்து அவரை அவதூறாக பேசி தாக்கினார். இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திக்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்