ஓட்டலில் பணம், செல்போன் திருட்டு

சங்கரன்கோவிலில் ஓட்டலில் பணம், செல்போன் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-01-18 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 64). இவர் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஓட்டலில் பின்புறம் வழியாக உள்ளே சென்ற மர்ம நபர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரம், செல்போனை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்