மழவன் சேரம்பாடியில் பொதுமக்களை காட்டு யானைகள் விரட்டியதால் பரபரப்பு

மழவன் சேரம்பாடியில் பொதுமக்களை காட்டு யானைகள் விரட்டியதால் பரபரப்பு;

Update:2023-06-12 00:15 IST

பந்தலூர்

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று இரவு சிவராஜ் வீட்டின் சமையல் அறை கதவை உடைத்து உள்ளே இருந்து அரிசியை 3 காட்டுயானைகள் தின்று சென்றது நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில ்பூசாரி கணேசன், அதேபகுதியை சேர்ந்த சத்துணவு பணியாளர் சுமதி சாலையில் நடந்து சென்றனர். அப்போது காட்டுயானைகள் அவர்களை துரத்தியது. பொதுமக்கள் கூச்சலிட்டதால் காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கள் சென்றன. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனசரகர் அய்யனார் உத்தரவுபடி வனவர் ஆனந்த் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களை காட்டு யானைகள் விரட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்